முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., ராணுவம் குண்டு வீச்சு: 48 தலிபான்கள் பலி

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

பெஷாவர், ஆக.21 - பாகிஸ்தானில் கைபர் மற்றும் வடக்கு வஜிரிஸ்தான் மலை பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் முகாம் அமைத்து பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுடன் அல்-கொய்தா தீவிரவாதிகளும் முகாமிட்டுள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கராச்சி விமான நிலையம் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 30 பேர் பலியானார்கள். அதை தொடர்ந்து தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. கைபர் மற்றும் வடக்கு வஜிரிஸ்தானில் போர் விமானங்கள் குண்டு வீசின. அதில் 600 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மீண்டும் தொடர்ந்து அங்கு குண்டு வீச்சு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கைபர் மற்றும் வடக்கு வஜிரிஸ்தானில் போர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் வீசப்பட்ட குண்டு வீச்சில் 30 தீவிரவாதிகள் பலியாகினர். மொத்தம் 48 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

இவை தவிர கைபர் பகுதியில் தீவிரவாதிகளின் 5 மறைவிடங்களும், வடக்கு வஜிரிஸ்தானில் 7 மறைவிடங்களும் அழிக்கப் பட்டன. அல்-கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர் புடைய தலிபான்கள் தலைவர் ஹபிஷ் குல்பகைதூரின் வீடு குண்டு வீச்சில் இடிந்து தரை மட்டமானது. இத்தாக்குதலின் போது பகதூர் வீட்டில் இல்லை. அங்கிருந்து வெளியேறி விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்