முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிராவில் காவல் துறையில் வாரிசுக்கு 5% இட ஒதுக்கீடு

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஆக 22 - காவல் துறையில் போலீசாரின் பிள்ளைகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மகராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

அரசு ஊழியர்கள் அகால மரணமடைந்தால் அவரது வாரிசுகளில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்படுகிறது. ஆனால் அரசு ஊழியர்கள் பிள்ளைகளுக்கு அரசு பணிகளில் தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை. மகராஷ்டிர அரசு முதன் முறையாக காவல் துறையில் போலீசாரின் பிள்ளைகளுக்கு 5 சதவீத இடங்களை ஒதுக்க முடிவு செய்துள்ளது. இதில் 3 சதவீத இட ஒதுக்கீடு பணியில் இருக்கும் போலீசாரின் பிள்ளைகளுக்கும், 2 சதவீதம் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் பிள்ளைகளுக்கும் ஒதுக்கப்பட இருக்கிறது. மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தவிர சரணடையும் நக்சலைட்டுகளுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசை அதிகரிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்