முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடதுசாரி சக்திகளை ஒருங்கிணைக்க முயற்சி: பிரகாஷ்

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஆக.22 - வகுப்புவாத சக்திகளின் சவால்களை முறியடிக்க இடதுசாரி சிந்தனையுள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் அகில் இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் மாத இதழ் சாரபில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்திய அரசியலில் இடதுசாரி இயக்கங்களின் தேவை என்ற தலைப்பில் அவர் பேசினார். அதில் அவர் கூறியதாவது:

மக்களைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இடதுசாரிகளின் கொள்கைகள் இனி இந்தியாவில் எடுபடாது என சிலர் பேசி வருகிறார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜவின் வெற்றி மூலம் இந்திய அரசியலில் வலதுசாரி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 80 நாள்களில் பல்வேறு கொள்கை முடிவுகளை மோடி அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தின விழாவில் உரையாற்றிய மோடி திட்டக் குழுவை கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு முதல் பிரதமர் நெருவால் திட்டக்குழு உருவாக்கப்பட்டது. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்த கடந்த 20 ஆண்டுகளில் திட்டக் குழுவுக்கான முக்கியத்துவம் சிறிது சிறிதாகக் குறைந்தது. இப்போது அதற்கு நிரந்தரமாக முடிவு கட்டப்போவதாக மோடி அறிவித்துள்ளார். தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள மோடி அரசு அனைத்துத் துறைகளில் தனியார்மயத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ராணுவத் தளவாட உற்பத்தியில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது அமெரிக்க ஆயுத நிறுவனங்கள் இந்திய ராணுவத்தில் தலையிட வழிவகுக்கும். நாட்டை முன்னேற்ற கசப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும் என பிரதமராகப் பொறுப்பேற்றும் மோடி குறிப்பிட்டார்.

ஆனால் பாஜக அரசின் தற்போதைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது மேலும் பல கசப்பு மருந்துகளை மக்கள் உட்கொள்ள வேண்டியிருக்கும். எனத் தெரிகிறது. மோடியின் ஆட்சியில் பெருமுதலாளிகளுக்கு மட்டும் நல்ல காலம் பிறந்துள்ளது. தொழிலாளர்களுக்கு ஒரளவு பாதுகாப்பு அளித்து வரும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர மோடி அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக ஆட்சிக்கு வந்ததும், இந்தியா ஹிந்து நாடு, இங்கு வசிப்பவர்கள் ஹிந்துக்கள், என்பது போன்ற அரசியில் சட்டத்துக்கு எதிரான கருத்துகளை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மீண்டும் கூறி வருகிறார்.

இது மதச்சார்பின்மை அரசியலுக்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். நவீன பொருளாதாரக் கொள்கைகளின் பாதிப்பிலிருந்தும், வகுப்புவாத சக்திகளிடமிருந்தும் நாட்டைப் பாதுகாக்க இடதுசாரி சிந்தனையுள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஒரே மேடையில் நின்று போராட வேண்டும். அதற்கான முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியுள்ளது என்றார் பிரகாஷ் காரத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago