முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்தர்கள் அடையாள அட்டை கொண்டு வர உத்தரவு

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, ஆக.22 - திருப்பதி ஏவுமலையான் கோவிலில் தினமும் சராசரியாக 65 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில், 300 ரூபாய் கட்டண தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலமும், இ.தரிசன கவுண்ட்டர்கள் மூலமும் டிக்கெட் விற்பனை செய்வது நேற்றிலிருந்து தொடங்கியது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் எம்.ஜி.கோபால் தெரிவித்த விவரம் வருமாறு:

300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் விற்பனை செய்வது 20-ஆம் தேதியில் இருந்து தொடங்கப்பட்டு உள்ளது. அதில், பக்தர்கள் 7 நாட்களுக்கு முன்னதாகவே தரிசன டிக்கெட்டை வாங்கி கொள்ள வேண்டும். தரிசன டிக்கெட் வாங்கியவர்கள் வருகிற 27-ஆம் தேதி சாமி தரிசனம் செய்யலாம். வெளியூரில் உள்ள இ.தரிசன கவுண்ட்டர்கள் மூலம் தினமும் 2 ஆயிரத்து 500 டிக்கெட் வழங்கப்படும்.

ஐதராபாத்தில் 850, விசாகப்பட்டினத்தில் 675, விஜயவாடாவில் 350, கர்னூலில் 100 திருப்பதியில் 200, நெல்லூரில் 100, நிஜாமாபாத்தில் 75, அனந்தபுரத்தில் 75 ஆக மொத்தம் 2 ஆயிரத்து 500 டிக்கெட் இ.தரிசன கவுண்ட்டர்களில் வழங்கப்படும். சாமி தரிசனம் செய்யும் நேரம் டிக்கெட்டில் கிறிப்பிடப்பட்டு இருக்கும். சாமி தரிசனம் செய்ய வரும் ஆண் பக்தர்கள் வேட்டி, சட்டை, பெண் பக்தைகள் பைஜாமா, குர்தா, சுடிதார், துப்பட்டா, சேலை, லங்காவோணி ஆகிய ஆடைகளை அணிந்து வர வேண்டும்.

பக்தர்கள் தங்களை பற்றிய ஒரிஜினல் அடையாள அட்டை மற்றும் அதன் நகல் 2 படிவங்கள் உடன் கொண்டு வர வேண்டும். அதில் ஒரு நகல் படி வைகுண்டம், கியூ காம்ப்ளக்ஸ் உள்ளே நுழையும்போதும், மற்றொரு நகல் படியை லட்டு கவுண்டரிலும் பரிசீலனைக்காக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்