முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

மதுரை, ஆக 22 - முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை சட்டப் போராட்டம் நடத்தி 142 அடியாக உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 5 மாவட்ட விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா மதுரையில் இன்று நடக்கிறது. இதில் தமிழக அமைச்சர்கள் மற்றும் 5 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் வருகையையொட்டி மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையொட்டி லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் குவிகிறார்கள்.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்கி வருவது முல்லைப் பெரியாறு அணையாகும். இந்த அணையில் இருந்து வரும் தண்ணீர் 5 மாவட்ட பாசன விவசாயத்திற்கும், குடிதண்ணீருக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஆரம்ப காலத்தில் 152 அடியாக இருந்தது. அதன்பின் பல்வேறு காலகட்டங்களில் 142 அடியாகவும், 136 அடியாகவும் நீர் மட்டம் குறைக்கப்பட்டது. இதனால் 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று 5 மாவட்ட மக்கள் நீண்ட நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று சட்டத்தின் வாயிலாக போராட்டம் நடத்தி டெல்லி சுப்ரீம் கோர்ட் வரை சென்று மத்திய அரசுடன் போராடி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா உயர்த்தி காட்டினார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்தலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்ட போராட்டத்தின் வாயிலாக பெற்றுத் தந்துள்ளார். அவரது துணிச்சல் மிக்க நடவடிக்கையை பாராட்டி 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா மதுரை ரிங் ரோடு மஸ்தான்பட்டி மைதானத்தில் நடக்கிறது.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் மையப் பகுதியாக விளங்கும் மதுரையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு விழாவை நடத்துவது பொருத்தமானது என்று விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்து இந்த பாராட்டு விழாவை இன்று நடத்துகிறார்கள். மதுரை ரிங் ரோட்டில் உள்ள மஸ்தான்பட்டியில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா இன்று மாலை 4.30 மணியளவில் நடக்கிறது. இந்த விழாவிற்காக மஸ்தான்பட்டி மைதானத்தில் பிரம்மாண்ட மேடை, மக்கள் அமரும் வகையில் பந்தலுடன் கூடிய திடல், சாலை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு விழா நடைபெறும் ரிங் ரோடு மஸ்தான்பட்டி மேடைக்கு வருகிறார். விழா சரியாக 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவிற்கு கம்பம் பள்ளத்தாக்கு நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாக உறுப்பினர் வெ. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்கிறார். பெரியாறு பாசன விவசாயிகள் சங்க பகிர்மான குழு தலைவர் இரா. அருள்பிரகாசம் வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள் ஓ. பன்னீர் செல்வம், நத்தம் இரா. விஸ்வநாதன், செல்லூர் கே. ராஜூ, எஸ். கோகுல இந்திரா, எஸ். சுந்தர்ராஜ், ஆர்.பி. உதயகுமார் மற்றும் வைகை பாசன விவசாயிகள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம். மதுரைவீரன், விவசாயிகள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் பனையூர் அ. அழகுசேர்வை, அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் எம்.எல்.ஏ ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதா ஏற்புரை நிகழ்த்துகிறார். இறுதியாக வைகை - கிருதுமால் நதி பாசன பகுதி விவசாயிகள் சங்க தலைவர் ஆலாத்தூர் கே. கோவிந்தன் நன்றி கூறுகிறார்.

இந்த விழாவில் மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள். மேலும் மதுரை,தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திரள்கிறார்கள். மேலும் விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் குடும்பம், குடும்பமாக வந்து கலந்து கொள்கிறார்கள்.

முதல்வர் ஜெயலலிதா மதுரை வருவதையொட்டி மதுரை ரிங் ரோடு பகுதி மற்றும் மைதான பகுதிகள் மின்னொளியில் பிரகாசிக்கிறது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாழை மர தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

முன்னதாக மதுரை வரும் முதல்வரை வரவேற்று மதுரை நகரில் 5 இடங்களில் ராட்சத பலூன்கள் விண்ணில் பறக்க விடப்பட்டுள்ளது. முதல்வர் வருகையையொட்டி ரிங் ரோடு மஸ்தான்பட்டி மைதானம் புதுப்பிக்கப்பட்டு பிரம்மாண்ட மேடை மற்றும் 10 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் முகப்பில் பெரியாறு அணையின் முழு வடிவ தோற்றமும், கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. ரிங் ரோடு பகுதி முழுவதும் வண்ண வண்ண தோரணங்களுடன் கூடிய வரவேற்பு வளைவுகளும், பேனர்களும், முதல்வரின் கட்அவுட்டுகளும், ஆர்ச்சுகளும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை வரவேற்க மதுரை மக்கள் எதிர்பார்த்து ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். முதல்வர் வருகையை அதிமுகவினர் ஒலிபெருக்கி மூலம் மதுரை நகர் முழுவதும் தெரிவித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago