முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் 2வது உலையில் விரைவில் மின் உற்பத்தி

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

நெல்லை, ஆக.23 - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2வது உலையில் விரைவில் மின் உற்பத்தி துவங்கும் என்று கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அணுசக்தி திருவிழா 4 இடங்களில் நடத்தியுள்ளோம். இதில் 230 பள்ளிகளைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1வது அணு உலையில் மின் உற்பத்தி ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் அடுத்த வாரம் இயக்க வாய்ப்பு உள்ளது. 1வது அணு உலையில் வர்த்தக ரீதியாக மின் உற்பத்தியை மேற்கொள்ள அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்க வேண்டும். அந்த ஆணையம் அங்கீகாரம் வழங்க ஆலோசனை நடத்தி வருகிறது. அனுமதி கிடைத்த உடன் மின் உற்பத்தி தொடங்கப்படும். அணு உலை இயங்கத் தொடங்கிய நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்குள் 1000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டும். 1வது அணு உலையில் இதுவரை 262 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. அதனை 1 யூனிட்டுக்கு ரூ.1.22 என்ற அளவில் வழங்கி வருகிறோம். வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 1 யூனிட்டுக்கு ரூ.3.50 என விலை நிர்ணயம் செய்யப்படும். 2007ம் ஆண்டிலேயே மின் உற்பத்தி தொடங்கப்பட வேண்டியது. இதால் உற்பத்தி செலவு அதிகரித்துவிட்டது. மேலும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததும் அதற்கு காரணம் ஆகும். 2வது அணு உலையில் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த அணு உலையில் விரைவில் வெப்பநீர் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் புதிதாக 3 மற்றும் 4வது அணு உலைகள் அகை;க பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது. அனைத்து ஒப்புதல்களும் கிடைத்து விட்டால் 5 முதல் 6 ஆண்டுகளுக்குள் கட்டுமான பணிகள் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்