முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய முயற்சிகளே வெற்றிக்கு வழிவகுக்கும்: கலாம்

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஆக 23 - வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.
சென்னை திருவேற்காட்டில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது,
ஆண்டுதோறும் பொறியியல் துறையில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் பெருகி வருகின்றன. அதற்கேற்ப மாணவர்களின் அறிவுத் திறனும் மேம்பட்டு வருகிறது. யாராக இருந்தாலும் அவர் எந்த தொழிலை செய்தாலும் அதில் புதுமையை புகுத்தி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் வெற்றி சாத்தியமாகும்.
தாமஸ் ஆல்வா எடிசன், மேரி கியூரி அம்மையார், ரைட் சகோதரர்கள் உள்ளிட்டோர் தாங்கள் எடுத்த முயற்சிகளில் எளிதாக வெற்றி பெறவில்லை. கணக்கற்ற தோல்விகளை சந்தித்த பிறகுதான் அவர்களால் சாதிக்க முடிந்தது. சின்ன சின்ன தோல்விகள் ஏற்பட்டாலே துவண்டு போகும் மனநிலையை மாற்றுங்கள். இலக்கை அடையும் வரை உங்கள் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளதே என்று மாணவர்கள் கேட்டதற்கு, உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க துறைகளில் இந்தியா பிற நாடுகளுக்கு முன்னோடியாக இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உங்களை போன்ற இளைஞர்களின் ஆற்றலால்தான் நமது ஒட்டுமொத்த வளர்ச்சி வேகத்தை துரிதப்படுத்த முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் சபரிநாத், முதல்வர் கயம்பழகன், இயக்குனர் வெங்கடேஷ்ராஜா, தலைவர் துரைசாமி, செயலர் தசரதன், இணை செயலர் கோபிநாத், துணை தலைவர் பரந்தாமன், பொருளாளர் அமர்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்