முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.22 - நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

லோக்பால் குழுவின் முக்கிய உறுப்பினர் எதிர்க்கட்சி தலைவர் என்பதை சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தை கிடப்பில் போடமுடியாது என்று கூறியுள்ளது.

எனவே, அரசு 2 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்துள்ளார். செப்டம்பர் 9-ல் வழக்கில் இறுதி விசாரணை நடைபெறும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்க்கட்சி பதவிக்கு தேவையான 55 எம்.பி.க்கள் எண்ணிக்கையை பெறவில்லை. இதனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி மறுக்கப்பட்டது. காங்கிரசுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்க முடியாது என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி லோக்பால் நியமனத்துக்கு மட்டுமல்லாமல் மேலும் சில நடவடிக்கைகளுக்கும் அவசியமாகவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்