முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திரா காந்தி படுகொலை குறித்த பாஞ்சாபி படத்துக்கு தடை

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.23 - 'கவும் தே ஹீரே' (சமுதாயத்தின் வைரங்கள்) என்ற பஞ்சாபி திரைப்படம், இந்திரா காந்தியை கொன்றவர்களை போற்றும் விதமாக இருப்பதால் அத்திரைப்படத்திற்கு தடை விதிப்பதாக தணிக்கை வாரியத் தலைவர் லீலா சாம்சன் டெல்லியில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை தொடர்பாக தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பஞ்சாபி படம், நேற்று (வெள்ளிக்கிழமை) திரையிடப்படுவதாக இருந்தது.

ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், பஞ்சாபி படத்தை மறு ஆய்வு செய்யப்போவதாகவும், அதன் காரணமாக அந்த படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய செய்தி, மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதித்து தணிக்கை வாரியத்தலைவர் லீலா சாம்சன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்ததை சித்தரிக்கும் விதமாக இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் கொலையாளிகள் இருவரும் போற்றப்படுகின்றனர். இது இந்திரா காந்தியின் படுகொலையை நியாயப்படுத்தும் விதமாக உள்ளது. இந்த படம் வெளியானால், பஞ்சாப் மாநிலத்தில் அமைதி சீர்குலையலாம் என்பதை கருத்தில் கொண்டு இந்த படத்திற்கு தடை விதிக்கப்படுகிறது என தணிக்கைத் துறை விளக்கமளித்துள்ளது.

1984-ம் ஆண்டு பஞ்சாபில் பிரிவினை கோரி போராடிய தீவிரவாதிகள், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் பதுங்கியிருந்தனர். அவர்களை வெளியேற்ற அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ராணுவ நடவடிக்கை எடுத்தார். இதனால், ஆத்திரமடைந்த இந்திராவின் சீக்கிய மெய்க்காப்பாளர்கள் அவரை சுட்டுக் கொன்றனர்.

இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற மெய்க்காப்பாளர்களை போற்றும் விதமாக ‘கவும் தே ஹீரே’ என்ற பஞ்சாபி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 22) வெளியாவதாக இருந்தது. படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரி பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு அளித்தனர்.

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராகேஷ் குமார், திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றார் என்ற புகாரின் பேரில் கடந்த திங்கள்கிழமை மும்பையில் கைது செய்யப்பட்டார்.

‘கவும் தே ஹீரே’ படத்தின் தயாரிப்பாளரும், ராகேஷ் குமாருக்கு லஞ்சம் கொடுத்து தணிக்கைச் சான்றிதழை பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

லஞ்சம் கொடுத்து அந்த படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்தும் விசாரிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago