முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.தலைவர் அமித் ஷாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத்,ஆக.23 - ஆந்திர மாநிலம் வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

இரண்டு நாள் பயணமாக ஐதராபாத் வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை, நேற்றுமுன்தினம் மாலை தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திர பாபு நாயுடு சந்தித்து பேசினார்.

தென் மாநிலங்களில், பாரதிய ஜனதா கட்சியை எழுச்சியடைய செய்வது குறித்து இந்த சந்திப்பில் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

தெலுங்கு நடிகரும் ஜன சேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாணும், அமித் ஷாவை சந்தித்து பேசினார். இது தனிப்பட்ட சந்திப்பு என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், பிரிக்கப்பட்ட தெலங்கானா மற்றும் ஆந்திராவில், பாஜக- வின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து நேற்று ஆலோசிக்கப்பட்ட பின்னர் ஆந்திராவில் உள்ள ஊராட்சித் தலைவர்கள் மத்தியில் அமித் ஷா உரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்