முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்னா குண்டு வெடிப்பு: குற்றப் பத்திரிகை தாக்கல்

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஆக 24 - பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு பாட்னாவில் பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சிமி இயக்கத்தை சேர்ந்த ஹைதர் அலி உள்ளிட்ட 10 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இது குறித்து பாட்னாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது,

சத்தீஸ்கர், டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மோடி கலந்து கொண்ட பிரச்சார கூட்டங்களுக்கு சென்று அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து ஹைதர் அலி உள்ளிட்டோர் கண்காணித்து வந்தனர். மோடியை நெருங்க முடியாததால் அவர் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையருகே குண்டு வெடிப்பை நிகழ்த்தி அதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரை நெருங்கி விடலாம் என்றும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

பாட்னாவை தொடர்ந்து டெல்லி, அஜ்மீர், ஜெய்ப்பூர், மும்பை, குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையருகே அடுத்தடுத்து பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் 6 பேர் உயிரிழந்தனர். 89 பேர் காயமடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்