முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை: இம்ரான்கான்

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக 24:

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக் இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் போராட்டம் நடத்தி வருகிறார். லாகூரி்ல் இருந்து இஸ்லாமாபாத்துக்கு சுமார் 60 ஆயிரம் தொண்டர்களுடன் அவர் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ளார்.

நவாஸ் ஷெரீப் பதவி விலகும் வரை அங்கிருந்து புறப்பட மாட்டேன் என அறிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். அவரது கட்சி தொண்டர்கள் இரவு பகலாக பாராளுமன்றம் முன்பு முகாமிட்டுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இம்ரான்கானுடன் பேச நவாஸ் ஷெரீப் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார். அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே கட்சியின் மூத்த தலைவர் ஷா மெக்மூத் குரேஷி, இம்ரான்கான் உட்பட தெக்ரிக் இன்சாப் கட்சியை சேர்ந்த 34 எம்பிக்களும் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் இவர்களது ராஜினாமாவால் நவாஸ்ஷெரீப் அரசுக்கு ஆபத்து எதுவும் ஏற்படாது. ஏனெனில் 342 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் நவாஸ் ஷெரீப் கட்சியை சேர்ந்த 190 எம்.பி,க்கள் உள்ளனர். எனவே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இம்ரான்கான் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி விவாதித்தார். முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் அடுத்த கட்ட  பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிக்க பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரியை பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று சந்தித்தார். ஆசிப் அலி சர்தாரி கராச்சியில் தங்கியுள்ளார். தற்போது அதிபர் பதவி விலகிய பிறகு பெரும்பாலான நாட்கள் துபாயில் முகாமிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்