முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வருடம் முதல் சென்னை பல்கலை.,யில் 11 புதிய துறைகள்

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக24 - சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்கை பேரிடர் மேலாண்மை துறை உள்பட 11 துறைகள் புதிதாக தொடங்கப்பட உள்ளன.

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

ஏற்கனவே சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ், ஆங்கிலம், வேதியியல் உள்ளிட்ட 68 துறைகள் உள்ளன. தற்போது மேலும் புதிதாக 11 துறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

அதாவது இயற்கை பேரிடர் மேலாண்மை துறை, கடல்சார் தொழில்நுட்பத்துறை, மூலிகை அறிவியல் துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட 11 வகையான புதிய துறைகள் இந்த வருடம் தொடங்கப்பட உள்ளன. இந்த துறைகளில் இந்த வருடம் 2014-2015 ஆம் கல்வி ஆண்டில் எம்.பில். மற்றும் பி.எச்.டி. ஆகிய ஆராய்ச்சி படிப்புகளை படிக்கலாம்.

வருகிற ஜூன் மாதத்திற்குள் ஒவ்வொரு துறைக்கும் 4 ஆசிரியர்கள் வீதம் 44 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார்கள். இதற்கான அனுமதியை தமிழக அரசு தந்தபின்பு ஆசிரியர் நியமனம் நடைபெறும்.

அடுத்த கல்வி ஆண்டு (2015-2016) முதல் முதுகலை படிப்பு தொடங்கப்படும். அப்போது மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுவார்கள். இந்த துறைகளை சேர்த்து 79 துறைகள் சென்னை பல்கலைக்கழகத்தில் இருக்கும்.

சேத்துப்பட்டில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான ஆக்கி மைதானம் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்பட உள்ளது. இந்த தொகையை மத்திய மனிதவளத்துறை வழங்கி உள்ளது.

மேற்கண்ட முடிவுகள் சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago