முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: யூ.பி.எஸ்.சி. தேர்வு இன்று நடக்கிறது

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.24

யூ.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வை ஒத்திவைக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனையொட்டி தேர்வு இன்று திட்டமிட்டபடி நடக்கிறது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி) ஐ.ஏ.எஸ். ஐ.ஆர்.எஸ், ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத்தேர்வு இன்று நடைபெறுகிறது.

இந்தத் தேர்வுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது, மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், 9 லட்சம் தேர்வர்கள் எழுத தயாராக உள்ள நிலையில், தேர்வுக்கு தடைவிதிக்க முடியாது. ஆங்கில மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது எனத் தெரிவித்தது.

மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து திட்டமிட்டப்படி இன்று தேர்வு நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்