முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. குழு மந்தமாக செயல்படுகிறது: நவநீதம் பிள்ளை

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க்,ஆக.24 - சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிகழ்ந்து வரும் மோதல்களைத் தடுக்க முடியாத வகையில் ஐ.நா. பாதுகாப்புக் குழு மந்தகதியில் செயல்படுகிறது என மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளையின் பதவிக் காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஐ.நா பாதுகாப்புக் குழு கூட்டத்தில் அவர் பேசினார். போர்களைத் தவிர்ப்பதற்கு கூடுதல் தீவிரத்துடன் செயல்படுவது தொடர்பான தீர்மானத்தின் மீது இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மனித உரிமை கள் ஆணைய தலைவராக அவரின் கடைசிப்பேச்சு இது என்பது குறிப் பிடத்தக்கது. நவநீதம் பிள்ளை பேசியதாவது:-

சிரியா உள்பட பல்வேறு நாடு களில் மோதல்கள் நிகழ்ந்து வரு கின்றன. இப்பிரச்சினைகளில் ஐ.நா. பாதுகாப்புக் குழு உரிய பொறுப்புணர்வுடன் செயலாற்றி யிருந்தால், பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பாதுகாத் திருக்க முடியும் என நம்புகிறேன். சிரியாவில் நடைபெற்றுவரும் மோதல் வெளிப்பகுதிகளுக்கும் கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவுகிறது.

ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ, இராக், லிபியா, மாலி, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், உக்ரைன், காஸா என பல்வேறு நாடுகளில் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. சர்வதேச சமூகம் இம்மோதல் களைத் தடுக்கமுடியாமல் தோல்வி யடைந்து விட்டது. இம்மோதல்கள் எதுவும் முன்னறிவிப்பின்றி எழுந்தவையல்ல.

இவ்வாறு நவநீதம் பிள்ளை பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்