முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை எதிரொலி: குற்றாலத்தில் குளிக்க தடை

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

தென்காசி, ஆக.24 - மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் மெயினருவி மற்றும் ஐந்தருவிகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

குற்றாலத்தில் தற்போது நிலவும் இறுதிக்கட்ட சீசனில் 10 நாட்களாக சாரல் இல்லாததுடன், கடும் வெயிலும் காணப்பட்டதால் அருவிகளில் தண்ணீர் வர்தது வெகுவாக குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் சுமாராகவே இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தென்காசி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென கனமழை பெய்தது. இதனால் முற்றால அருவிகளில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது.

மெயினருவியில் பாதுகாப்பை வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது. வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மாலையில் அருவியில் தண்ணீர் குறைவாக விழுந்து இரவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரவிலும் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று காலையிலும் மழை பெய்து வந்தது. மழையின் காரணமாக மெயினருவியில் வெள்ளப் பெருக்கு குறையவே இல்லை. இதனால் குளிக்க விதிக்கப்பட்ட தடை நேற்று முதல் தொடர்ந்தது.

ஐந்தருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டியதால் அங்கும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயினருவி, ஐந்தருவயில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் வெளியூரிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்