முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோஹ்லி - அனுஷ்கா விவகாரம்: பிசிசிஐ விளக்கம்

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக.24 - விராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்யப்போவதாக உறுதியளித்ததால் இங்கிலாந்துக்கு சென்ற இந்திய அணியுடன் அனுஷ்காவை அழைத்துவர அனுமதிக்கப்பட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இங்கிலாந்த் டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை சந்திக்க, இந்திய வீரர்கள் தங்களது மனைவி மற்றும் காதலிகளை உடன் அழைத்து சென்றதும் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து பத்திரிகையொன்றுக்கு பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பெயர் தெரிவிக்க விரும்பாத பேட்டியொன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: மனைவிகளை அழைத்துவர வீரர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கோஹ்லி தனது காதலியை அழைத்துவர ஏன் அனுமதித்தீர்கள் என்று பிசிசிஐயிடம் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக தெரிவித்து அனுமதி கேட்டதால் பிசிசிஐ அந்த அனுமதியை அளித்தது. சொல்லப்போனால் முதலில் நாங்கள் தயங்கினோம். ஆனால் அவர்கள் கூறிய உறுதிமொழியை நம்பித்தான் அனுஷ்காவையும் லண்டன் வர சம்மதித்தோம்.

மீடியாக்களின் கண்களில் படாமல் அனுஷ்கா போட்டிகளை பார்க்க வந்திருந்தார். கோஹ்லியும், அவரும் ஒன்றாக ஊரை சுற்றியதையும் கூட மீடியாக்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார்.

மீடியாக்களின் கண்களில் அனுஷ்காவும், கோஹ்லியும் ஒன்றாக சுற்றுவது தென்பட்டுவிடக்கூடாது என்று பிசிசிஐ கவலைப்பட்டது. ஆனால் சில நிர்வாகிகள்தான் கூறினர் "பூனைக்குட்டி பையைவிட்டு வெளியே வராமல் கோஹ்லி பார்த்துக்கொள்வார்" என்று. இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளதாக இங்கிலாந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago