முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் 200 இடங்களில் விநாயகர் சிலைகள்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, ஆக 25 - மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 200 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படவுள்ளன.

வரும் 29ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. சதுர்த்தியன்று தனி நபர்கள், இந்து அமைப்பினர் ஆகியோர் விநாகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவர். பின்னர் அச்சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதும் வழக்கம். மதுரை மாநகரில் கடந்த ஆண்டு 162 இடங்களில் காவல் துறை அனுமதியுடன் விநாயர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்திக்காக கோச்சடை, சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகின்றன. இந்து முன்னணி, இந்து பக்தசபை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நகரில் நிறுவப்படவுள்ளன. இதுவரை பல்வேறு அமைப்புகள் சார்பில் சுமார் 30 இடங்களில் சிலைகள் வைக்க போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.  இந்து முன்னணி சார்பில் நகரில் 200 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படவுள்ளதாகவும், அதற்காக அந்தந்த பகுதியில் உள்ள இந்து முன்னணி நிர்வாகிகளிடம் விவரம் கோரப்பட்டுள்ளதாகவும் அதன் மாநகர் மாவட்ட தலைவர் பாண்டி கூறினார். விநாயகர் சிலைகள் காவல் துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் விதிகளுக்கு உட்பட்டே தயாரிக்கப்படுவதாகவும், இந்து அமைப்பினர் கூறுகின்றனர். சிலைகள் 5 அடி முதல் 11 அடி வரையிலான உயரத்துடன் இருக்கும் வகையிலும் சிவதாண்டவ விநாயகர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சிலை வடிவம் இருக்கும் என்றும் அவர்கள் கூறினர். மதுரை நகரில் பேச்சியம்மன் படித்துறை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவது வழக்கம். ஆகவே வரும் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை அமைப்புகள் வாரியாக சிலைகளை கரைக்க போலீசார் அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். சதுர்த்தியை முன்னிட்டு அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் மெகா கொழுக்கட்டை படையல் தயாரிக்கப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்