முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இணையவழி மூலம் கோ ஆப்டெக்ஸ் துணிகள் விற்பனை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

 

தஞ்சை, ஆக 25:

கோ ஆப்டெக்சில் விரைவில் இணையவழி மூலம் துணிகள் விற்பனை செய்யும் முறையை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா பேசினார்.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் ரூ. 10 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தை திறந்து வைத்த பின் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது,

கோ ஆப்டெக்சில் கடந்த ஆண்டு விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தங்க மழை பரிசு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ரூ. 2000 க்கும் அதிகமாக துணிகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கூப்பன் வழங்கப்பட்டது. சிறந்த வாசகங்களை எழுதி வழங்கிய 10 பேருக்கு தலா 8 கிராம் தங்க காசுகள் பரிசாக வழங்கப்படுகின்றன. ஆறுதல் பரிசாக 8 பேருக்கு தலா 2 கிராம் தங்க காசுகள் அளிக்கப்படுகின்றன. தனியார் துணி கடைகளில் இணைய வழி மூலம் துணிகள் வாங்கும் வசதி உள்ளது. அது போ கோ ஆப்டெக்சிலும் இணையவழி மூலம் துணிகள் வாங்கும் முறையை தமிழக முதல்வர் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார். நம் நாட்டில் மட்டுமல்லாமல் அயல்நாடுகளில் வசிப்போரும் கோ ஆப் டெக்சில் துணிகளை வாங்க விரும்புகின்றனர். எனவே இணையதளத்தில் துணிகளை பற்றிய விவரம், வண்ணம், வடிவமைப்பு, விலை,  பணம் செலுத்துமிடம், போன்றவை குறிப்பிடப்படவுள்ளன என்றார். கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சகாயம் பேசுகையில், இந்த நிறுவனத்தில் 2013-14ம் ஆண்டில் ரூ. 301.44 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டது. கோ ஆப்டெக்ஸ் வரலாற்றில் இவ்வளவு அதிக அளவில் விற்பனை செய்தது இதுவே முதல் முறை. இந்த நிதியாண்டில் இதை விட கூடுதலாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்