முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவில் கோபுர சிலைகள் சீரமைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, ஆக 25 - திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்றுமுன்தினம் அதிகாலை முதல் மாலை 6 மணி வரை 48,216 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன் பிறகும் வைகுண்டம் நியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. தர்ம தரிசனத்துக்கு 28 மணி நேரமானது. கால்நடையாக வந்த பக்தர்கள் 14 மணி நேரம் காத்து நின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை மதியம் நிறுத்தப்பட்டது. மேலும் முடி காணிக்கை செலுத்த பக்தர்கள் 3 மணி நேரம் வரிசையில் நின்றனர். லக்கேஜ் கவுண்டரிலும்ர 2 மணி நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை இருந்தது. உண்டியல் வருமானமாக நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் ரூ. 2.9 கோடி வசூலானது. திருப்பதி கோவில் கோபுர சிலைகள் உடைந்து இருந்தது. அந்த சிலைகளை சீரமைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. திருப்பதி கோவில் கோபுரம் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1950-53ம் ஆண்டு கோபுரம் பராமரிக்கப்பட்டது. பிரமோற்சவத்தின் போதுன கோபுரத்தில் மின் விளக்கு அலங்காரம் செய்ய ஊழியர்கள் ஏறுவதால் சிலைகள் உடைந்து சேதமாகி இருந்தது. இது பற்றி பல்வேறு தரப்பினர் புகார் செய்ததன் பேரில் கோபுர சிலைகளை சீரமைக்கும் முடிவை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்