முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்துக்கு பிரதமர் மோடி டெலிபோனில் வாழ்த்து

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக. 26 – தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 63–வது பிறந்தநாளை நேற்று எளிமையாக கொண்டாடினார். நேற்று காலையில் பட்டு வேட்டி–சட்டை உடுத்தி வீட்டில் உள்ள தனது பெற்றோர் படத்துக்கு மரியாதை செலுத்தினார். அப்போது அவரது மனைவி பிரேமலதா மகன்கள் சண்முகபாண்டி, பிரபாகரன், தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரதமர் மோடி, விஜயகாந்துக்கு டெலிபோனில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், குமாரவேலு, பேராயர் எஸ்றா சற்குணம், டைரக்டர்கள் விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, நடிகர் ராஜேந்திர நாத் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், நடிகர் சத்தியராஜ், ராதாரவி, எச்.வசந்தகுமார் உள்பட பலர் போனில் வாழ்த்து தெரிவித்தனர்.

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, சந்திரகுமார், நல்லதம்பி, சுபா, மாவட்ட செயலாளர்கள் வி.என்.ராஜன், செந்தாமரைக் கண்னன், டிரிபிள் எஸ். சந்திரன் மற்றும் அம்பத்தூர் எஸ்.ஆஸ்டின் உள்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று சால்வை, மாலை அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

வீட்டில் இருந்து வெளியே வந்த விஜய்காந்த் தொண்டர்களை சந்தித்து அவர்களுக்கு இனிப்பு வழங்கினார். தே.மு.தி.க.வினர் நேற்று தமிழ்நாடு முழுவதும் விஜயகாந்த் பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்