முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்புப் பணம் பதுக்கியுள்ள 100 இந்தியர்கள் தகவல்கள் கிடைத்தது

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.26 - கருப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் 100 பேர் குறித்த தகவல்களை இந்தியாவிடம் சுவிட்ஸர்லாந்து நாட்டு வங்கிகள் அளித்துள்ளன.

இந்தியாவில் இருந்து பல லட்சம் கோடி கருப்புப் பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவை குறித்த முழுமையான விவரங்களை அளிக்க அந்த நாட்டு அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் தரப்பில் ரூ.14,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணத்தை டெபாசிட் செய்துள்ளவர்கள் தங்களின் முழு விவரங்களையும் பகிரங்கமாக அளித்திருப்பதால் அவை கருப்புப் பணம் இல்லை என்று சுவிட்சர்லாந்து மத்திய வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால் தொண்டு நிறுவனங் கள், அறக்கட்டளைகள், நிறுவனங் கள், பினாமி பெயர்களில் ஏராள மான இந்தியர்கள் பல லட்சம் கோடி கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் சுவிட்சர் லாந்துக்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் 25 ஆயிரம் பேர் அடிக்கடி வந்து செல்பவர்கள். அவர்கள் சுற்றுலா பயணிகள் அல்ல. சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள பெரும் செல்வந்தர்கள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சுவிட்சர்லாந் துக்கு அடிக்கடி பயணம் மேற் கொள்ளும் இந்தியர்கள் குறித்து வருமான வரித் துறை ரகசியமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் புதிய அரசு பதவியேற்ற பின்னர் கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சுப்ரீம் கோர்ட்வழிகாட்டுதலின்படி கருப்புப் பணத்தை மீட்க சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவினர் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் விசாரித்து வருகின்றனர். கருப்புப் பண மீட்புக் குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய நேரடி வரி ஆணைய அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருந்து சில ரகசிய அறிக்கைகளை அண்மையில் பெற்றுள்ளனர்.

இதன்படி குறிப்பிட்ட இரண்டு சுவிஸ் வங்கிகளில் இருந்து அதிகாரபூர்வமாகவும் ரகசியமாகவும் முக்கிய தகவல்கள் அடங்கிய பட்டியல் பெறப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களை வருமான வரித் துறையினர் தற்போது தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சுவிஸ் வங்கிகள் அளித்த பட்டியலின்படி டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை, சண்டிகர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த 100 பேரை வருமான வரித் துறையின் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெயர்ப் பட்டியலை மட்டும் அளித்துள்ள சுவிஸ் வங்கிகள், வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டது. எனவே குறிப்பிட்ட 100 பேரும் சுவிஸ் வங்கிகளில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்த விவரங்கள் அவர்களிடம் இருந்தே சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் அவர்களிடம் இருந்து ரூ.50 கோடி முதல் ரூ.80 கோடி வரை வரிவசூல் செய்யப்படும் என்று வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago