முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா பிரித்ததால் பாதிப்பு இல்லை: நரசிம்மன்

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

திருமலை, ஆக.27 -  ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதால், இரு மாநிலத்திற்கும் எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் அமைதியாக உள்ளனர் என ஆந்திர, தெலுங்கானா கவர்னர் நரசிம்மன் தெரிவித்தார்.

ஆந்திர, தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், அடுத்த மாதம் நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவ சுவரொட்டிகளை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியாதாவது:-

ஏழுமலையான் கோயிலில் தற்போது 3 வரிசையாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு இல்லை. விஐபிகள் தரிசனம் செய்ய வந்தால், பக்தர்கள் தரிசனம் செய்வது சுமார் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டு வந்தது. தற்போது, பக்தர்கள் நிறுத்தப்படுவது இல்லை. ஐதராபாத்தில் நடைபெற உள்ள ஊர்வலத்தில் ஆந்திர மாநில போலீசரும், திருப்பதி பிரமோற்சவத்தின் போது தெலுங்கானா போலீசாரும் பாதுகாப்புக்கு வருவது குறித்து அந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும். மாநில பிரிவினையால், இரு மாநிலத்திலும் பாதிப்புகள் ஏற்படுவது போல் செய்திகள் வெளியாகின்றன. ஆனால், மாநிலம் பிரிக்கப்பட்டு இரு மாதம் ஆகியும் குறிப்பிடும் அளவுக்கு மோசமான சம்பவம் ஏதும் இல்லை. ஒரே மொழி பேசும் மக்கள் இருப்பதால் அமைதியாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, இணை செயல் அலுவலர் சீனி வாசராஜூ, துணை செயல் அலுவலர் சின்னங்காரு ரமணா, எஸ்பி கோபிநாத் உட்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் கவர்னர் நரசிம்மன் திருவண்ணாமலை புறப்பட்டு சென்றார். முன்னதாக திருச்சானூர் பக்மாவதி தாயார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்