முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயிரம்விளக்கில் ரூ.25 கோடி செலவில் துணை மின்நிலையம்

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 27 – முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 24 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் துணை மின் நிலையத்துக்கு மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் , அமைச்சர் பா. வளர்மதி கலந்து கொண்டார்.

மக்களுக்கு தங்குதடையின்றி மின்சாரம் வழங்குவதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி 118–வது வார்டு ராயப்பேட்டை அம்மையப்பன் சந்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. மின் கட்டணம் செலுத்தும் மையமும் அமைக்கப்படுகிறது.

இதற்கு நேற்று காலை அமைச்சர் நத்தம் விசுவநாதன் அடிக்கல் நாட்டினார். அமைச்சர் பா. வளர்மதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் 24 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். 9 மாதங்களில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கு துணை மின் நிலையம் அமைப்பதன் மூலம் 110. 111, 118 ஆகிய கோட்டங்களில் உள்ள மக்கள் பயன்பெறுவார்கள்.இந்த நிகழ்ச்சியில்மண்டல குழு தலைவர் சக்தி, 118–வது வார்டு மாமன்ற உறுப்பினர்,ஆயிரம் விளக்கு பகுதி செயலாளரும், கவுன்சிலரும், நுங்கை மாறன், , கவுன்சிலர்கள் புஷ்பா நகர் ஆறுமுகம், சாந்தி பாஸ்கர் மற்றும் ஜே. பார்த்தசாரதி, மன்சூர் அகமது உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்