முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 தினங்களில் குரூப்-2 தேர்வு முடிவு வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 27–குரூப் 2 தேர்வு முடிவு 15 தினங்களில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) சென்னையில் நேற்று

நிருபர்களிடம் கூறியதாவது:–

கடந்த டிசம்பர் மாதம் ‘குரூப் 2’ தேர்வை 1064 பேர் எழுதினார்கள். ‘குரூப் 2’ தேர்வு முடிகள் இன்னும் 15 தினங்களில் வெளியிடப்படும். இதேபோன்று வி.ஏ.ஒ தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியாகும். குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து இன்னும் 1 மாதத்தில் அறிவிப்பு வெளியாகும்.

உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கு 162 இடம் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப அக்டோபர் 18 மற்றும் 19–ந் தேதிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது. ஆன்–லைன் மூலம் விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 21–ந் தேதி கடைசி நாள் ஆகும்.2011–க்கு பிறகு பி.எல். படித்தவர்களுக்கு அனுபவம் தேவையானது. அதற்கு முன்பு படித்தவர்கள் 3 வருடம் வக்கீலாக பணிபுரிந்து இருக்க வேண்டும். 4 பாடங்களில் 400 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். போர்டு தேர்வு 60 மதிப்பெண் ஆகும்.

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. அப்படி ஏதாவது தகவல் தெரிந்தால் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்