முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரிய எல்லையில் தீவிரவாதிகள் தோண்டிய சுரங்கங்கள்

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

பீஜிங், ஆக 28 - சீனாவில் வடகொரிய எல்லைக்கு அருகே பதட்டமான பகுதிகளில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஏராளமான சுரங்க பாதைகளை அமைத்துள்ளது சீன செயற்கை கோள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவு பெற்ற கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தினர் சீனாவில் உள்ள ஜின்ஜியாங் பிராந்தியத்தில் ஊடுருவி உள்ளனர். அவர்கள் சமீப காலமாக அப்பிராந்தியங்களில் பல்வேறு வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜின்ஜியாங் உட்பட பல்வேறு பிராந்தியங்களில் ஏராளமான மக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களின் நடமாட்டம் மற்றும் தாக்குதலை சீன ராணுவம் முறியடித்து வருகிறது.

இந்நிலையில் வடகொரிய எல்லைக்கு அருகே சீனாவின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் துர்கிஸ்தான் தீவிரவாதிகள் ஏராளமான சுரங்க பாதைகளை உருவாக்கி வைத்துள்ளனர். அந்த சுரங்கங்களை சீனாவின் கவோ பென் - 1 என்ற செயற்கை கோள் விண்ணில் இருந்து துல்லியமாக படம் எடுத்து அனுப்பி உள்ளது. வடகொரிய எல்லைக்கு அருகே சீனாவின் ஹிலோங்ஜியாங், ஹிபே, ஜிலின் பிராந்தியங்களிலும் சுயாட்சி பிராந்தியமான மங்கோலியாவிலும் முறைகேடாக ஏராளமான கஞ்சா தோட்டங்கள் உள்ளன. அத்தோட்டங்களுக்கு இடையே துர்கிஸ்தான் தீவிரவாதிகள் பல்வேறு சுரங்கங்களை தோண்டி வைத்துள்ளனர். அவர்கள் தப்பிப்பதற்காக தோண்டிய சுரங்கங்கள் அனைத்தும் தற்போது சீன செயற்கை கோளின் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அப்பிராந்தியங்களில் நாங்கள் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அந்த படங்கள் உதவியுள்ளன என்று சீன ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்