முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் ஏரியை அழகுபடுத்த ரூ.88 கோடி: முதல்வர்

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.28:கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அங்குள்ள ஏரி ரூ.87 கோடியே 96 லட்சம் செலவில் அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நகர்ப்புறங்களில் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குதிலும், பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரினை வழங்குவதிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திட்டங்களை தீட்டிச் செயல்படுத்துவதிலும் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

சுற்றுலாத் தலமாக விளங்கும் கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த மூன்று ஆண்டுகளில், 27 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், தெருவிளக்குகள் பொருத்துதல், திடக்கழிவு மேலாண்மை பணிகள் என 132 அடிப்படை வசதிப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன. கொடைக்கானல் நகராட்சியில் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த எனது தலைமையிலான அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும். கொடைக்கானல் நகர மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 43 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான கீழ்குண்டாறு குடிநீர் திட்டம் என்னால் அறிவிக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொடைக்கானல் நகராட்சியில் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டு, பொதுமக்களுக்கு மேலும் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதென எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி,கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் வகையில், 87 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொடைக்கானல் ஏரி அழகுபடுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தின் கீழ் ஏரியினை தூர்வாருதல், ஆகாயத் தாமரை மற்றும் தேவையற்ற நீர் தாவரங்களை அப்புறப்படுத்துதல், நீரில் உள்ள ஆக்ஸிஜன் தன்மையினை அதிகரித்தல், மீன் வளர்ப்பிற்கு தேவையான தகுந்த சூழ்நிலையினை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், ஏரியினை சுற்றிலும் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் வெளியேற்றுதல், கழிவு நீர் மேலாண்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை, பூங்கா அமைத்தல், வாகன நிறுத்தம் அமைத்தல், சாலை வசதியினை மேம்படுத்துதல், அலங்கார தாவரங்களை அமைத்தல், வண்டல் படிவுகளை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும். இவை மட்டுமின்றி, படகு குழாம்களை முறைப்படுத்தி அழகுப்படுத்துதல், ஏரியின் எழில் தோற்றத்தினை மேம்படுத்துதல், சுற்றுலா தகவல் மையம், சைக்கிள் நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்.

மேற்காணும் நடவடிக்கைகள், கொடைக்கானல், நகராட்சி சார்ந்த மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கிடைத்திடவும், ஆரோக்கியமான சுற்றுசூழல் நிலவவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago