முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மவுலிவாக்கத்தில் மற்றொரு கட்டிடத்தை இடிக்க முடிவு

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.28 – சென்னை போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில் மதுரையை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் இரண்டு 11 மாடி கட்டிடங்களை கட்டி வந்தது. இதில் ஒரு கட்டிடம் கடந்த ஜூன் 28–ந் தேதி திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் அங்கு பணியாற்றிய 61 பேர் பலியானார்கள்.

மீட்பு பணிகள் முடிந்த பிறகு விபத்துக்குள்ளான கட்டிடத்துக்கு அருகில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த கட்டிடமும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கருதி அதற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அதன் அருகே யாரும் இப்போது அனுமதிக்கப்படுவதில்லை.

கட்டிடத்தை சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பாற்ற நிலையில் இருக்கும் இந்த 11 மாடி கட்டிடத்தின் அஸ்திவாரம் கட்டிட வடிவமைப்பாளரின் பரிந்துரையை பின்பற்றாமல் கட்டப்பட்டுள்ளது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது பைல் பவுண்டேஷன் சரிவர அமைக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்ட மணலில் கலப்படம், ஒரு தளத்தை கட்டி முடிந்து அதன் மீது மற்றொரு தளம் அமைக்க போதுமான கால அவகாசம் கொடுக்காமல் கட்டிடத்தை கட்டியது உள்பட பல்வேறு விதி மீறல்கள் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் இந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

இவற்றையெல்லாம் ஆய்வு செய்த சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் 11 மாடி கட்டிடத்தை இடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனேகமாக சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் இதற்கான பணிகள் துவங்கும் என்றும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்