முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

22 மொழிகளை ஆட்சிமொழியாக சட்டதிருத்தம் தேவை

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.28 – எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளை ஆட்சிமொழியாக்க சட்டதிருத்தம் தேவை என்று வைகோ கோரியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

அரசியல் சட்டத்தின் 8–வது அட்டவணையில் உள்ள தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளை இந்தியாவின் ஆட்சிமொழியாக, அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மிகவும் நியாயமானது.

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்றும், தேசிய ஒருமைப்பாடு நீடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறபோது, பல்வேறு தேசிய இனங்களின் மொழிகளுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பது மட்டுமே சரியான நிலைப்பாடாக இருக்கும்.

2001–ம் ஆண்டில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தனி நபர் சட்ட முன்வடிவை நான் கொண்டுவந்து, அதன் மீது விவாதம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக, வழக்காடும் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் எனறு நீண்ட காலமாக தமிழ்நாட்டின் சார்பில் மத்திய அரசிடம் வற்புறுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி நிலைபெற மாநில மக்களின் உணர்வுகளுக்கும், மொழிகளுக்கும் உரிய மதிப்பு அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும்.

மத்திய அரசின் தேர்வாணையத் தேர்வுகளில் தமிழ்மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளும் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது. எனவே, யூ.பி. எஇ.சி. முதல் நிலைத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு தேர்வாணையம் விடாப்பிடியாக தேர்வை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

மாநிலங்களின் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி கோடிட்டுக் காட்டி வருகிறார். எனவே, பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும், இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலும் அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்க உரிய அரசியல் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago