முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாநாதி மாறனின் கல் கேபிள் நிறுவனத்திற்கு கண்டனம்

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, ஆக.28 - கலாநாதி மாறனுக்கு சொந்தமான  கல் கேபிள் நிறுவனத்திற்கு  சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேபிள் டி.வி. ஒளிபரப்பு செய்வதற்கு சென்னை மற்றும் கோவை மாநகரங்களில் எம்.எஸ்.ஓ. லைசன்ஸ் தேவைப்படும். அந்த லைசன்ஸை மத்திய அரசு கல் கேபிள் நிறுவனத்திற்கு கொடுத்திருந்தது. இதற்கிடையில் மத்திய அரசு உள்துறை அமைச்சகம் கல்கேபிள் நிறுவனத்திற்கு செக்குரிட்டி வழங்க முடியாது என்று மறுத்துள்ளது.
செக்யூரிட்டி கிளீயரன்ஸ் மறுக்கப்பட்ட காணரத்தால், சென்னை மற்றும் கோவையில் கேபிள் ஒளிபரப்பு வழங்குவதற்கு கல்கேபிள் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த எம்.எஸ்.ஓ. லைசன்ஸை ரத்து செய்து மத்திய செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 20_ந் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவிற்கான கடிதம் ஆகஸ்ட் 26_ம் தேதி வந்தது. இந்த உத்தரவை எதிர்தது கல்கேபிள் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ராமசுப்பிரமணியம் முன்பு வந்தபோது, நீதிபதி மனுதாரரின் வழக்கறிஞரை பார்த்து கல்கேபிள் நிறுவனமாகிய நீங்கள் இவ்வளவு நாள் நீங்கள் செய்த கர்மம் இவ்வளவு சீக்கிரமாக திரும்புகிறது பார்த்தீர்களா? இதுவரை உங்களால் வேறு எம்.எஸ்.ஓ.வோ அல்லது அரசு கேபிள் நிறுவனமோ டிஜிட்டல் ஒளிப்பரப்பு உரிமையை பெற முடியாத வகையில் நீங்கள் தடுத்தீர்கள். இதுவரை கேபிள் டி.வி. நிறுவனத்தின் ஏகாதிபத்தியத்துடன் செயல்பட்டு வந்தீர்கள்.  இன்னும் 15 நாட்களில் உங்கள் எம்.எஸ்.ஓ. பரிபோகிறது என்று தெரிந்தவுடன் நீதிமன்றத்தை நாடி வந்தீர்களா?  அதற்கு மனுதாரரின் வழக்கிறஞர் மத்திய அரசின் தற்போதைய ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகுதான் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு நீதிபதி கடந்த மே 2014 வரை மத்திய அரசின் மந்திர சபையில்  நீங்கள் அங்கம் வகித்தவர்கள்தானே? இதை வழக்காக பதிவு செய்யுங்கள் நாளை  (இன்று) காலையில் விசாரணை செய்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்