முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு எதிரான போர்: கைகோக்கும் 7 நாடுகள்

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக 28 - தனி நாடு கோரிக்கையோடு இராக்கில் படையெடுத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக போராடும் அந்நாட்டின் குர்திஸ் படைக்கு வலுசேர்க்கும் வகையில் அமெரிக்க ராணுவத்துடன், 7 நாடுகளின் படைகள் இணைகின்றன.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சக் ஹேகல் கூறும்போது, "பாக்தாதில் இராக் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் அப்பாவி மக்களை காக்கும் வகையில் மனித நேய அடிப்படையிலான தாக்குதல்களை நடத்துகின்றன. அங்கு உள்ள குர்திஸ் படைக்கு ஆயுத பயிற்சியையும் தளவாடங்களையும் வழங்கி வருகிறோம். இத்துடன் இராக் அரசுக்கு துணையாக அல்பானிய, கனடா, குரோஷியா, டென்மார்க், இத்தாலி, ப்ரான்ஸ், மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் இணைய உள்ளன. இராக் மக்களின் பாதுகாப்புக்காக, இந்த நாடுகள் இணைய முன்வந்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது. இரண்டு வாரங்களுக்கு முன் இருந்தே, இராக்கில் குர்திஸுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பமானது. மற்ற நாடுகளும் எங்களுடன் இணைய முன் வந்தால், நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். அமெரிக்கப் படைகளுடன் துணை நிற்க போகும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி" என்றார்.

இராக்கில் ஷியா பிரிவு தலைமையிலான அரசுக்கு எதிராக எழுந்துள்ள ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் சன்னி இஸ்லாமியர்களின் தனி இஸ்லாமிய நாடு அமைக்க பல நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிரியா மற்றும் இராக் எல்லைகளில் இவர்கள் பல நகரங்களை வசப்படுத்தி உள்ளனர்.

இராக்கின் கோரிக்கையை அடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக போராடும் குர்திஸ் ராணுவப் படைக்கு வலுசேர்க்க அமெரிக்க ராணுவம் அங்கு தனது தாக்குதலை தொடர்ந்தது.

அமெரிக்கப் படைகள் விரைந்த பின்னர், ஐ.எஸ் வசம் இருந்த மொசூல் அணை மீண்டும் இராக் அரசுப் படையால் மீட்கப்பட்டது. இதனால் கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவை தங்களது உள்நாட்டு பிரச்சினையில் தலையிட வேண்டாம் என்று கண்டிப்பு தெரிவித்திருந்தனர். அமெரிக்க பத்திரிகையாளர் படுகொலை வீடியோ வெளியீடுக்கு பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

முதற்கட்டமாக இராக்கில் நேற்று முன்தினம் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் முகாம்கள் மீது வான்வழித் தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. இந்த தாக்குதலை சிரியாவிலும் மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது குறித்த அறிவிப்பை வெளியிட வெள்ளை மாளிகை மறுத்தது.

"இராக் மற்றும் சிரியாவில் உளவுப் பணிகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று கூறிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கேத்லீன் ஹேடன், அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்காக, அனைத்து விதமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறி இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago