முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் அறிவுரையை பிரதமர் மதிக்க வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி. ஆக 29:

குற்றப்பின்னணி உள்ளவர்களை அமைச்சர்களாக்க கூடாது என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்திருப்பதை பிரதமர் நரேந்திர மோடி மதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 45 பேர் கொண்ட மத்தியஅமைச்சரவையில் 13 பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றில் 8 பேரின் மீது உள்ள குற்றச்சாட்டுகள் கடுமையானதாகும். குறிப்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி மீது 13 வழக்குகள் உள்ளன. இதில் 2 கொலை முயற்சி வழக்குகள், 6 வன்முறை வழக்குகள் அடங்கும்.

குற்ற வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாலும் எம்.பி, எம்.எல்.ஏ பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விடுவார் என சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பின்னர் லல்லு பிரசாத் உள்ளிட்டோர் எம்.பி. பதவியை இழந்தனர். குற்ற பின்னணி உள்ளவர்களை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என்று பொதுநல வழக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்ற பின்னணி கொண்ட மத்திய அமைச்சர்களை பதவி நீக்க சட்டத்தில் இடமில்லை. இருப்பினும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காப்போம் என உறுதிமொழி எடுத்து கொண்ட பிரதமரும், முதல்வர்களும் குற்ற பின்னணி உள்ளவர்களை அமைச்சர்களாக நியமிக்க கூடாது என கருத்து தெரிவித்திருந்தது.

இந்த தீர்ப்பை பிரதமர் நரேந்திர மோடி மதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் கவுடா கூறுகையில், மோடி அமைச்சரவையில் உள்ள நிதின் கட்காரி, நிகால்சந்த், உபேந்திர குஷ்வாகா, உமாபாரதி, ராம் சாகேப் தான்வே ஆகியோர் மீது பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மீது மோடி எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கிறார் என்பது இனிமேல் அவர் எடுக்கும் முடிவுகளில் இருந்து தெரிந்து விடும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago