முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா: இன்று துவக்கம்

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நாகை, ஆக 29:

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறைமாவட்ட ஆயர், தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் திருக்கொடியை புனிதம் செய்து வைக்கிறார். புனிதம் செய்யப்பட்ட கொடி வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றப்படும். அதன்பின் பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை நடைபெறும். தொடர்ந்து நற்கருணை ஆசீர், தமிழிவ் திருப்பலி நிறைவேற்றப்படும். விழாவில் பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார், பங்குத்தந்தை சூசை மாணிக்கம் அடிகளார், உதவி பங்கு தந்தைகள் ஆரோக்கியசுந்தரம், டாரிஸ்ராஜ் உள்ளிட்ட பாதிரிமார்களும் அருட்சகோதரிகளும் லட்சக்கணக்கான பக்தர்களும் கலந்து கொள்கின்றனர். தினமும் பேராலயம், விண்மீன் ஆலயம், பேராலய கீழ் கோயில், மேல் கோயில் ஆகிய இடங்களில் காலை, மதியம், மாலையில் சிறப்பு திருப்பலி நடைபெறும். இரவு மாதா தேர் பவனி நடைபெறும். வரும் 5ம் தேதி மாலை புனித பாதையில் கொங்கனி, தமிழ், ஆங்கிலம், மராத்தியில் சிலுவை பாதை நடைபெறும். 6ம் தேதி மாலை புனித பாதையில் ஜெபமாலை நடைபெறும். 7ம் தேதி இரவு பெரிய தேர் பவனி நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். வரும் 8ம் தேதி மாலை கொடியிறக்கப்பட்டு ஆண்டு திருவிழா நிறைவடையும். வேளாங்கண்ணி திருவிழாவுக்காக தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. விழாவை முன்னிட்டு போலீசார் கடற்கரை, கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்