முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச வீட்டுமனை பட்டா சிறப்பு திட்ட காலவரம்பு நீட்டிப்பு

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 29 – இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்ட காலவரம்பு அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு வருவாய்த் துறையின் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருப்போருக்கு, அவர்களின் ஆக்கிரமிப்புகளை வரைமுறை செய்து வீட்டு மனைப்பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம் தேதியிட்ட அரசாணையில் வெளியிடப்பட்டது. அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து, அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு, மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு, அந்த குடியிருப்புகளை இந்தத் திட்டப்படி புலத்தணிக்கை செய்யும்.

பின்னர் உள்ளாட்சி மன்றங்களின் தீர்மானங்களைப் பெற்று, அந்நிலங்கள் அரசுக்கு தேவையில்லை என்றால், வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி வரைமுறைப்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 8-ந் தேதியன்று சட்டசபையில் வருவாய்த் துறை அமைச்சர் ‘‘வீட்டுமனை இல்லாத ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 2014–-2015-ம் நிதியாண்டில் 3 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்’’ என்று அறிவித்தார்.

எனவே இந்தத் திட்டத்தை மேலும் கால நீட்டிப்பு செய்ய உத்தேசிக்கப்பட்டது. அரசின் இலவச வீட்டுமனை வழங்கும் ஒருமுறை சிறப்புத் திட்டத்தில் விடுபட்டுள்ள ஏழை-எளிய மக்கள் பயன் அடைவதற்காக, இத்திட்டத்திற்கான காலவரம்பை, 1.-10.-13 முதல் 2015-ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்