முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அறிமுகம்

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

 

சென்னை, ஆக. 29 – தெற்கு ரெயில்வே கால அட்டவணை நேற்று

வெளியிடப்பட்டது. இதில்10 புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம்:–

1. அகமதாபாத்– சென்னை சென்ட்ரல் (வாரம் 2 முறை)

2. லோக் மன்யா திலக்– சென்னை சென்ட்ரல் (வாரம் ஒருமுறை)

3. பெங்களூர் – சென்னை சென்ட்ரல் (தினசரி)

4. விசாகப்பட்டினம் – சென்னை சென்ட்ரல் (வாரம் ஒருமுறை)

5. மன்னார்குடி – ஜோத்பூர் (வழி: சென்னை எழும்பூர்– வாரம் ஒருமுறை)

6. திருவனந்தபுரம் – டெல்லி (வாரம் ஒருமுறை)

7. திருவனந்தபுரம் – நிஜாமுதீன் (வழி: ஆலப்பூழை– வாரம் ஒருமுறை)

8. நாகர்கோவில் – கச்சிகூடா (வழி: மதுரை, நாமக்கல், காட்பாடி– வாரம் ஒருமுறை)

9. பெங்களூர் – மங்களூர் (வழி : மைசூர், தினசரி)

10. ஹவுரா – யஷ்வந்த்பூர் (வழி : புவனேஸ்வர், ரேணி குண்டா, காட்பாடி– வாரம் ஒருமுறை)

இந்த புதிய ரெயில்கள் இயக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

புதிதாக 4 பயணிகள் ரெயில்கள் விடப்படுகின்றன. அதன் விவரம்:–

1. மன்னார்குடி – மயிலாடுமுறை (தினசரி)

2. புனலூர் – கன்னியாகுமரி (தினசரி)

3. பெங்களூர் – சென்னை சென்ட்ரல் (தினசரி)

4. விசாகப்பட்டினம் – சென்னை சென்ட்ரல் (வாரம் ஒருமுறை)

இந்த பயணிகள் ரெயில்கள் இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இதுதவிர சென்னைக்கு வரும், சென்னையில் இருந்து புறபடும் பல்வேறு ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரெயில் கால அட்டவணையில் 31 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–

1. ரெயில் எண் (17236) நாகர்கோவில்– பெங்களூர் எக்ஸ்பிரஸ் (160 நிமிடம்).

2. எண்: (16382) கன்னியாகுமரி– மும்பை (80 நிமிடம்).

3. எண் 16527 கன்னியாகுமரி– பெங்களூர் (7 நிமிடம்).

4. ரெயில் எண் 22632– பைக்கானியா– சென்னை சென்ட்ரல் (60 நிமிடம்).

5. எண் 16733, ராமேஸ்வரம்- வோகா (40 நிமிடம்).

6. எண் 11043: லோக் மான்யா– மதுரை (40 நிமிடம்).

7. எண். 16231: மயிலாடுதுறை– மைசூர் (30 நிமிடம்).

8. எண் 16022: மைசூர்– சென்னை சென்ட்ரல் (25 நிமிடம்).

9. எண் 16855: புதுச்சேரி– மங்களூர் (20 நிமிடம்).

10. எண் 17313: சென்னை சென்ட்ரல்– கூப்ளி (20 நிமிடம்).

11. எண் 22851: சத்திரகாசி– மங்களூர் (20 நிமிடம்)

12. எண் 12651: மதுரை– நிஜாமுதீன் (20 நிமிடம்).

13. எண் 12521: பரணி– எர்ணாகுளம் (15 நிமிடம்).

14. எண் 12682: கோவை– சென்னை சென்ட்ரல் (15 நிமிடம்).

15. எண் 16232: மைசூர்– மயிலாடுதுறை (15 நிமிடம்).

16. எண் 16381: சத்ரபதி சிவாஜி–டெர்மினல்– கன்னியாகுமரி (15 நிமிடம்).

17. எண் 22634: திருவனந்தபுரம்– அஸ்ரத் நிஜாமுதீன் (15 நிமிடம்).

18. எண் 22682: சென்னை சென்ட்ரல்– மைசூர் (15 நிமிடம்).

19. எண் 22852: மங்களூர்– சத்திரகாசி (15 நிமிடம்).

20. எண் 12084: கோவை– மயிலாடுதுறை (10 நிமிடம்).

21. எண் 12663: அவுரா– திருச்சி (10 நமிடம்).

22. எண் 16125: எழும்பூர்– ஜோத்பூர் (10 நிமிடம்).

23. எண் 16235: தூத்துக்குடி –மைசூர் (10 நிமிடம்).

24. எண் 16317: கன்னியாகுமரி– ஜம்முதாவி (10 நிமிடம்).

25. எண் 16318: ஜம்முதாவி– கன்னியாகுமரி (10 நிமிடம்).

26. எண் 17606: கச்சகுடா– மங்களூர் (10 நிமிடம்).

27. எண் 22113: லோக் மான்யா திலக் டெர்மினல் – கொச்சிவேலி (10 நிமிடம்).

28. எண் 22815: பிலாஸ்பூர்– எர்ணாகுளம் (10 நிமிடம்).

29. எண் 11042: சென்னை சென்ட்ரல்– மும்பை ஜி.எஸ்.டி.

30. எண் 12674: சேரன் எக்ஸ்பிரஸ் கோவை– சென்னை சென்ட்ரல் (10 நிமிடம்).

31. எண் 16024: திருப்பதி– சென்னை சென்ட்ரல் (10 நிமிடம்).

எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்துள்ளது. இரவு 8.50–க்கு புறப்படுவதற்கு பதில் 8.55–க்கு புறப்படும்.

திருச்சியில் இருந்து (எண் 16854) சென்னை எழும்பூருக்கு மாலை 5.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் 6 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.25–க்கு புறப்பட்ட மங்களூர் எக்ஸ்பிரஸ் (12601) இனி இரவு 8.15 மணிக்கு புறப்படும்.

சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு இரவு 9.30 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் இனி இரவு 9 மணிக்கு புறப்படும்.

சென்ட்ரலில் இருந்து இரவு 9 மணிக்கு பழனிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இனி இரவு 9.30 மணிக்கு புறப்படும்.

இந்த ரெயில்களின் மாற்றம் வருகிற 1–ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்