முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை வெளிவட்ட சாலை: முதல்வர் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.29 - மண்ணிவாக்கம் முதல் நெமிலிச்சேரி வரை 27 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதல் கட்டமாக ரூ.1081.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சென்னை வெளிவட்ட சாலையை முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை வெளிவட்ட சாலை (முதல் கட்டம்) திறப்பு விழாவும் மற்றும் 2-ம் கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சென்னை மாநகரை சுற்றி சீரான நெரிசலற்ற போக்குவரத்து வழங்கிடும் வகையில் முதற்கட்டமாக 1,081.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மண்ணிவாக்கம் முதல் நெமிலிச்சேரி வரை 27 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள சென்னை வெளிவட்ட சாலையினை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் ரூ.1075 கோடி மதிப்பீட்டில் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை 30.50 கி.மீ. நீளத்திற்கு புதிதாக அமைக்கப்பட உள்ள சென்னை வெளிவட்டச் சாலையின் 2-ம் கட்ட பணிகளுக்கும் நேற்றுமுதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

ஒரு மாநிலத்தின சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளில் சாலைக் கட்டமைப்பு வசதி மிக முக்கியப் பங்கினை வகிக்கிறது. சாலைக் கட்டமைப்பு வசதியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப மாநிலம் முழுவதும் புதிய சாலைகளை அமைத்தல், புதிய பாலங்களைக் கட்டுதல், ஏற்கனவே உள்ள சாலைகள் மற்றும் பாலங்களைப் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை மாநகரைச் சுற்றி அமைந்துள்ள பிரதான தொழிற் வளர்ச்சி மையங்களை இணைக்கும் வகையிலும், இப்பகுதிகளில் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், வெளிவட்டச் சாலை அமைத்திட முதற்கட்டமாக, தேசிய நெடுஞ்சாலை 45-ல் உள்ள வண்டலூரில் தொடங்கி தேசிய நெடுஞ்சாலை 4-ல் நசரத்பேட்டை வழியாக, தேசிய நெடுஞ்சாலை 205-ல் உள்ள நெமிலிச்சேரி வரை 6 வழி சாலையாக அமைத்திட தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, இயக்கம், ஒப்படைத்தல் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன்படி, 1081 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மண்ணிவாக்கம் முதல் நெமிலிச்சேரி வரையில் அமைக்கப்பட்டுள்ள 27 கிலோ மீட்டர் நீளமுள்ள சென்னை வெளிவட்டச் சாலையை முதல்வர் ஜெயலலிதாதிறந்து வைத்தார்..மேலும் ரூ.1075 கோடி மதிப்பீட்டில் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை 30.50 கி.மீ. நீளத்திற்கு புதிதாக அமைக்கப்பட உள்ள சென்னை வெளிவட்டச் சாலையின் 2-ம் கட்ட பணிகளுக்கும்நேற்று முதல்வர்ஜெயலலிதா அடிக்கல் நாட்டி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவருமான ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்