முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலங்கள் - அலுவலகக் கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.29 - முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலி காட்சி மூலம் ரூ.2286.கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான 36ஆற்றுப்பாலங்கள்;1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்

மண்ணிவாக்கம் முதல் நெமிலிச்சேரி வரை 27 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதல் கட்டமாக ரூ.1081.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சென்னை வெளிவட்ட சாலையை முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை வெளிவட்ட சாலை (முதல் கட்டம்) திறப்பு விழாவும் மற்றும் 2-ம் கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

மேலும் வேலூர் மாவட்டம் - பசுமாத்தூர், திருவள்ளூர் மாவட்டம் - தொளவேடு, காஞ்சிபுரம் மாவட்டம் - தழுதாலிகுப்பம் மற்றும் கடப்பாக்கம், தருமபுரி மாவட்டம் - வெங்கடதாரஅள்ளி மற்றும் நாகர்கூடல், திருவண்ணாமலை மாவட்டம் - அனக்காவூர், விழுப்புரம் மாவட்டம் - தானமானியம் மற்றும் பாலப்பட்டு, சேலம் மாவட்டம் - சூளாங்குறிச்சி, நாமக்கல் மாவட்டம் - கோம்பைபேடு, படைவீடு மற்றும் காமாட்சிபுரம், ஈரோடு மாவட்டம் - சிக்கள்ளி, உப்புக்கார பள்ளம் மற்றும் குமார வலசு, கடலூர் மாவட்டம் - திட்டக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் - தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டம் - திருக்கலார், நாகப்பட்டினம் மாவட்டம் - வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, அய்யனார் கோயில் மற்றும் கொள்ளிதீவு, விருதுநகர் மாவட்டம் - சங்கரமூர்த்திபட்டி, பாலவநத்தம், நென்மேனி மற்றும் சேத்தூர், திண்டுக்கல் மாவட்டம் - மானூர், தூத்துக்குடி மாவட்டம் - கூட்டாம்புளி மற்றும் முக்காணி ஆத்தூர், திருநெல்வேலி மாவட்டம் - ஆய்க்குடி, நெடுவயல் மற்றும் திருக்குறுங்குடி, திருப்பூர் மாவட்டம் - சிக்கனாபுரம் தண்ணீர் பந்தல், கூட்டுப்புளி மற்றும் ஆண்டியூர் ஆகிய இடங்களில் 129 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 34 ஆற்றுப்பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள்;

விழுப்புரம் மாவட்டம் - சங்கராபுரத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை; திருப்பூர் மாவட்டம் - தாராபுரத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகம் மற்றும் ஆய்வகம்; திருநெல்வேலி மாவட்டம் - சிவகிரியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகம்; தூத்துக்குடி மாவட்டம் - திருவைகுண்டத்தில் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகம் ;

என 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்கள்.

நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 16 பேர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.

முதல்வர் ஜெயலலிதா நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் திறந்து வைத்து, அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் மொத்த மதிப்பு 2286 கோடியே 91 லட்சம் ரூபாய் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில்,நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தலைமைச் செயலாளர்மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன்,நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர்

ராஜீவ் ரஞ்சன்,ஜி.எம்.ஆர். குழும நிறுவனத்தின் தலைவர் ஜி. மல்லிகார்ஜுனா ராவ், ஜி.வி.ஆர். இன்ப்ரா புராஜெக்ட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே. கங்கா பிரசாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago