முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.29 - முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலகத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆங்கில மொழி ஆய்வகம் மற்றும் பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்கள். மேலும், 103 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

பள்ளி கல்வி மேம்பாட்டிற்காக, குறிப்பாக ஏழை எளிய மாணவ, மாணவியர்

இடை நிற்காது தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் கட்டணம் இல்லா கல்வி, சத்தான உணவு, விலையில்லா சீருடைகள், மடிக்கணினிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள், கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், ஊக்கத் தொகை, பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30 கணினிகள், பிரிண்டர்கள், நகல் இயந்திரம், எல்.சி.டி. புரஜக்டர் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆங்கில மொழி ஆய்வகம் மற்றும் பயிற்சி மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று காணொலிக் காட்சி (ஏனைநடி ஊடிகேநசநnஉiபே) மூலமாகத் திறந்து வைத்தார்கள்.

மேலும், 22 மாவட்டங்களில் அமைந்துள்ள 76 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 81 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், சுற்றுச் சுவர், குடிநீர் வசதி;

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டம், தரகம்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் போடிச்சம்பள்ளியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளிக் கட்டடம்;

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள

186 அரசுப் பள்ளிகளில் 15 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள

276 கூடுதல் வகுப்பறைகள்;

காஞ்சிபுரம் மாவட்டம் - சிட்லபாக்கம் ஒன்றியம்; புதுக்கோட்டை மாவட்டம் - மணமேல்குடி ஒன்றியம்; நாமக்கல் மாவட்டம் - எருமைப்பட்டி ஒன்றியம் ஆகிய இடங்களில் தலா 20 லட்சம் ரூபாய் வீதம் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டடங்கள்;

வேலூர் மாவட்டம் - வேலூரில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையின் மண்டல அலுவலகக் கட்டடம்;

என மொத்தம் 103 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்கள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரிடையே அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 1 ஆம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 45 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்களுக்கு கையெழுத்து பயிற்சி ஏடுகள்; 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும்

63 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களது கலைத் திறன் மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் பயிற்சி ஏடுகள்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள் போன்றவற்றை மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளவும், ஆசிரியர்கள் வழங்கும் முக்கிய குறிப்புகளை குறித்து வைத்துக் கொள்ளவும் முதன் முறையாக பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு, ஆகியவை 8 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா 30.7.2014 அன்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்கள்.

இந்தத் திட்டங்களைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 7 மாணவ, மாணவிகளுக்கு கையெழுத்து பயிற்சி ஏடுகள், ஓவியப் பயிற்சி ஏடுகள், பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளில் 53,288 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தற்போது, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,353 முதுகலை ஆசிரியர்கள், 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள், என மொத்தம் 14,700 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 822 ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். 14,700 ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக

7 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் த. சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் . விபு நய்யர், ., பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர் .இராமேஸ்வர முருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago