முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயவாடா குண்டூர் இடையே தலைநகர்: சந்திரபாபு நாயுடு

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

நகரி, ஆக.30 - ஒருஙிகிணைந்த ஆந்திரா தெலுங்கானா, ஆந்திரா என இரண்டு மாநிலமாக பிரிக்கப்பட்டது.

ஐதாராபாத் தெலுங்கானாவுடன் இணைக்கப்பட்டது. என்றாலும் 10 ஆண்டுகள் இரு மாநிலத்துக்கும் பொது தலைநகராக இருக்கும் என்றும், அதற்குள் ஆந்திராவுக்கு புதிய தலைநகர் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. ஆந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்க சிவராமகிருஷ்ணன் தலைமையிலான ஒரு குழுவை மத்திய அரசு நியமித்தது. இக்குழுவினர் ஆந்திராவின் 13 மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தியது.

இதற்கிடையே விஜயவாடா- குண்டூர் இடையே புதிய தலைநகர் அமைய இருப்பதாக தகவல்கள் பரவியது. மந்திரிகளும் இதே கருத்தை கூறிவந்தனர். ஆனால் மத்திய குழு விஜயவாடாவை நிராகரித்தது.

வட ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் புதிய தலைநகர் அமைக்க வேண்டும் என்று மத்திய குழு கருதுகிறது. விஜயவாடா விளைச்சல் நிலம் கொண்ட பகுதி என்பதாலும், தலைநகர் அமைந்தால் விவசாயநிலம் அழிந்துவிடும் என்றும் இது மாநிலத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தி ஆபத்தை விளைவிக்கும் என்றும் மத்திய குழு கருதுகிறது.

மத்திய குழு தலைநகரை தேர்வு செய்தாலும் மாநில அரசின் முடிவு தான் இறுதியானது என மத்திய அரசு அறிவித்திருந்தால் குழுவின் கருத்தை ஏற்க சந்திரபாபு நாயுடு மறுத்து வருகிறார். விஜயவாடா-குண்டூர் இடையேதான் தலைநகர் அமையும் என்று தெலுங்கு தேச மந்திரிகள் உறுதிபட கூறி வருகிறார்கள். மந்திரிகள் கருத்தை ஆமோதிப்பது போல் சந்திரபாபு நாயுடுவும் செயல்படுவதாக கூறப்படுகிறது. காட்டுக்குள் தலைநகர் அமைந்தால் யார் குடிவருவார்கள் என சமீபத்தில் அளித்த பேட்டி இதற்கு உதாரணமாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்