முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக 7-வது முறை முதல்வர் தேர்வு

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.30 – அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 7-வது முறையாக முதல்வர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டதாக கட்சியின் அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதையடுத்து முதல்வருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. அமைச்சர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து ஆசி பெற்றனர். அதிமுகவினர் பட்டாசு வெடித்து தலைமை கழகத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதை கொண்டாடினர். இது பற்றி கூறிய முதல்வர் ஜெயலலிதா, வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும். அதை வாங்கி தந்த பெருமை தொண்டர்களை சேரும் என்று உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டார். ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி அ.தி.மு.க. தலைமைக் கழக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

`அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்' பொறுப்புக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 19.8.2014 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, வேட்பு மனுக்கள் 20.8.2014 முதல் 24.8.2014 வரை தலைமைக் கழகத்தில் பெறப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், முதல்வர் ஜெயலலிதாவுக்காக மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெறப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்தும் கழக சட்ட திட்டங்களுக்கு ஏற்ப சரியாக அமைந்துள்ளது.

""அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், கழகத்தின் அனைத்து அடிப்படைப் பொது உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்"" என்ற கழக சட்ட திட்ட விதி 20, பிரிவு - 2ன்படி, முதல்வர் ஜெயலலிதா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக, கழகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பது மகிழ்ச்சியோடு அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்