முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் நீதிபதிக்கு தொந்தரவு: ம.பி. நீதிபதிக்கு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

போபால், ஆக.30 - பெண் நீதிபதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குவாலியர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய பெண் நீதிபதி, மத்தியப்பிரதேசம் ஐகோர்ட் நீதிபதி தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அவர் தன்னை மீண்டும் கூடுதல், செசன்ஸ் நீதிபதியாக பணியமர்த்துமாறு கோரி சுப்ரீம் கோர்ட் டில் மேல் முறையீடு செய்தார். மேலும், தனது குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருந்த அவர் அந்த விசாரணைக் குழுவுக்கு மாறாக, இரண்டு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள், ஒரு ஐகோர்ட் நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழுவையும் அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

விசாரணைக் குழு மாற்றி அமைக்கப்பட்டால் மட்டுமே நேர்மையான விசாரணை நடைபெறும் என்றும் அவ்வாறு குழு மாற்றப்படாவிட்டால் தான் விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், பெண் நீதிபதியின் கோரிக்கை மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்