முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெடக் எம்.பி. தொகுதியில் 3 முனைப் போட்டி

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

நகரி, ஆக.30 - தெலுங்கானா மாநிலம் மெடக் பாராளுமன்ற தொகுதியில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில் சந்திரசேகரராவ் வெற்றி பெற்றார்.

பின்னர் தெலுங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்றதால் எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியான மெடக் தொகுதிக்கு அடுத்த மாதம் 13-ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதர்கான வேட்புமனு தாக்கல் முன்தினம் முடிவடைந்தது.தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வேட்பாளராக பிரபல தொழிலதிபரும், சோனி டிராவல்ஸ் நிறுவன தலைவருமான கொத்த பிரபாகர் ரெட்டி போட்டி யிடுகிறார்.

இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக அனிதா லட்சும் ரெட்டி போட்டியிடுகிறார். மனுதாக்கலுக்கான கடைசி நாளன்று தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பாரதீய ஜனதா தனது வேட்பாளரை நிறுத்தியது. ப.ஜ சார்பில் ஜெப்பிரகாஷ் ரெட்டி என்று ஜெக்கா ரெட்டி மனுதாக்கல் செய்தார். இதனால் மெடக் தொகுதியில் மும்முனை போட்டி ஏர்பட்டுள்ளது.

இதனால், டிஎஸ்ஆர் கட்சியனர் உற்சாகம் அடைந்து உள்ளனர். கடந்த முறை இந்த தொகுதியில் சந்திரசேகரராவ் 5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே போன்ற வெற்றி மீண்டும் பெறுவோம் என அவர்கள் கூறினார்கள். மெடக் தொகுதியில் உள்ள 7 சட்டமன்ற தகுதிகளிலும் டிஆர்எஸ் கட்சி வசம் உள்ளது என்பதால் எங்கள் வெற்றி உறுதி என்றும் அவர்கள் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்