முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.19 கோடியில் புதிய விருந்தினர் மாளிகை: முதல்வர் அடிக்கல்

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.31 - முதல்வர் ஜெயலலிதா 28.8.2014 அன்று தலைமைச் செயலகத்தில், திருச்சிராப்பள்ளி அரசு விருந்தினர் மாளிகையில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல் தளத்தையும், ஈரோட்டில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையையும் திறந்து வைத்தார்கள். மேலும், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள விருந்தினர் மாளிகை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

திருச்சிராப்பள்ளி அரசு விருந்தினர் மாளிகையில் 7555 சதுர அடி பரப்பளவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 5 அறைகள் கொண்ட முதல் தளம், மேலும், விருந்தினர் மாளிகைக்கான மழைநீர் சேகரிப்பு வசதி, நடைபாதை, புல்வெளி உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விரிவுபடுத்தப்பட்ட விருந்தினர் மாளிகை கட்டடம்;

ஈரோட்டிலுள்ள பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் 3982 சதுர அடி பரப்பளவில், 6 குளிர்சாதன அறைகள், மழைநீர் சேகரிப்பு வசதி, நடைபாதை மற்றும் புல்வெளி உள்ளிட்ட வசதிகளுடன் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய விருந்தினர் மாளிகை; என 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விருந்தினர் மாளிகைக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தரைதளத்துடன் கூடிய இரண்டு தளங்களாக 60,364 சதுர அடி பரப்பளவில், 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய விருந்தினர் மாளிகை கட்டடத்திற்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி, அதன் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார்.

புதிதாக கட்டப்படவுள்ள இந்த விருந்தினர் மாளிகை, தரை தளத்தில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய 16 அறைகள் மற்றும் 2 கூட்ட அரங்குகள், முதல் தளத்தில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய 16 அறைகள் மற்றும் 4 கூட்ட அரங்குகள், இரண்டாவது தளத்தில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய

8 அறைகள் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஆகிய வசதிகளுடன் கட்டப்படும்.

இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் திரு மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்