முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவும் - சீனாவும் போட்டியே இல்லை: ஒபாமா

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஆக.31 - முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது அமெரிக்காவின் தலைமை உலக நாடுகளுக்குத் தேவைப்படுகிறது என்றும், தமது நாட்டுக்கு சீனாவோ ரஷ்யாவோ போட்டியாக இல்லை என்றும் அந்நாட்டின் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது:- உண்மையை கூற வேண்டும் என்றால், உலகில் தற்போது ஒழுங்கில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. சமூக வலைதளங்களும் சில வசதிகளும் இந்த விஷயங்கள் குறித்து அவ்வப்போது தெரிந்துகொள்ள உதவுகின்றன.

முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது அமெரிக்காவின் தலைமை இந்த உலகிற்கு தேவைப்படுகிறது. நமக்கு சீனாவோ அல்லது ரஷ்யாவோ ஒரு போட்டியே இல்லை. நாம் கொண்டுள்ள கருத்துக்களுக்கும் நமது மதிப்பிற்கும், தற்போது போட்டியாளர்கள் யாரும் இல்லை. சீனாவும் ரஷ்யாவும் நமக்கு இணையானவர்களும் இல்லை.

சீனா முன்னேற்றங்களில் முதன்மை பெற்றுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், என்னால் உங்களிடம் உறுதியாக கூற முடியும். உங்களிடம் சீனா அல்லது அமெரிக்கா என்று இரண்டு தேர்வுகளை தந்தால், நீங்கள் நிச்சயம் தேர்வு செய்யும் ஒன்றாக அமெரிக்கா இருக்கும்.

அதேபோல, ரஷ்யா மிகவும் கடுமையான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறுவர். நான் கேட்கிறேன்... ரஷ்யாவில் குடியேறுவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றார்களா?. இல்லவே இல்லை!

மக்கள் தற்போது மிகவும் கவலை அடைந்துள்ளனர். இரவு நேர செய்திகள் இதனை அப்படியே பிரதிபலிக்கும். நம் முன் சில அசாதாரண சவால்கள் உள்ளன. அதனை தாண்டி நாம் வாழ்ந்தாக வேண்டும். 50, 60 அல்லது 100 ஆண்டுகளாக இருந்த நிலைமை சில தருணத்தில் மாறும். இந்த மாற்றம் எப்போதும் வேண்டுமானாலும் நடக்கலாம்.

சில பழைய வாக்கியங்கள் தற்போது எடுபடுவதில்லை. ஆனால் புதிய விஷயங்களும் பிறக்கவில்லை. நாம் பயணிக்கும் பாதை சவால்கள் கொண்டுள்ளது, அவை கரடுமுரடானவை.

ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் கொடூரங்களை நாம் பார்க்கிறோம். 'செப்டம்பர் 11' இரட்டை கோபுரத் தாக்குதல் நடத்தி அல்-காய்தா ஏற்படுத்திய அதே மனநிலை இப்போதும் உள்ளது. இவர்கள் நமக்கு இஸ்லாமை உணர்த்தவில்லை. மாறாக, காட்டுமிராண்டித்தனம், தீவிரவாதம் மற்றும் வெறுப்பினை மட்டுமே பிரதிபலிக்கின்றனர்.

இஸ்லாமியர்கள், சன்னி - ஷியா என இருப் பிரிவினர்களாக உள்ளதை நாம் பார்க்கிறோம். இதுபோன்ற பிரிவினை உள்ள பகுதிகளில் வளர்ச்சி இல்லாமல் உள்ளதும் தெரிகிறது. அங்கு இருக்கும் இளைஞர்கள் வளர்ச்சி பாதையில் செல்வதற்கு மாறாக தவறான பாதைகளை பின் தொடர்கின்றனர். எதிர்காலத்தை இழந்தே விட்டனர்.

இவை நமக்கு எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. ரஷ்யா முன்னெடுத்து செல்ல வேண்டியவைகளை செய்யாமல், பின் நோக்கிய சிந்தனையில் செயல்படுவது வறுத்தம் அளிக்கிறது. அண்டை நாடுகளின் இறையாண்மையை ஒருமைபாடுக்காக பாடுபட வேண்டிய நாடு, அதற்கு எதிராக செயல்பட கூடாது.

இதனால் பெரிய அளவிலான மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இங்கே தெளிவுப்படுத்த விரும்புவது, அமெரிக்காவை காட்டிலும் எந்த ஒரு நாட்டின் ராணுவமும் சிறந்த முறையில் இல்லை. இவ்வாறு ஒபாமா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago