முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமாரம்கலம் பிர்லாவுக்கு எதிரான வழக்கை விட்டது சிபிஐ

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.31 - நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரத்தில், தொழிலதிபர் குமாரங்கலம் பிர்லாவுக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், இதற்கான அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. அப்போது இந்த வழ்ககு தொடர்பாகசில் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிருப்பதாக சிபிஐ தெரிவித்தது. அதைத் தொடர்ந்து அந்த அறிக்கை மீது வரும் 1-ஆம் தேதி பரிசீலனை நடத்தப்படும் என்று சிபிஐ நதிமன்றம் அறிவித்தது. மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில், நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீட்டு செய்யப்பட்டதில், அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரிகயின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் புகார் குறித்து, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதில், ஒருகட்டமாக தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு 2005-ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள் முறைகேடாக ஒதுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, குமாரமங்கலம் பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் பரேக் உள்ளிட்டோர் மீது சிபிஐ கடந்த ஆண்டு முதல்தகவல் அறிக்கை பதிலு செய்தது. அதில், நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பாரேக் தலைமையில் நடந்த கூட்டத்தில், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான ஹிண்டால்கோ, இண்டால் நிறுவனங்களுக்கு தாலிபரா 2, தாலிபரா 3 ஆகிய நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய முடியாது என பரேக் நிராகரித்து விட்டார். அதையடுத்து அந்த 2 சுரங்கங்களும், பொதுத்துறை நிறுவனங்களான நெய்வேலி அனல்மின் நிலையம், மகாநதி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால், சில நாள்களிலேயே தனது முடிவை மாற்றிக் கொண்டு, 2 சுரங்கங்களையும் ஹிண்டால்கோ, மகாநதி, நெய்வேலி அனல்மின் நிலையங்களுக்கு பரேக் ஒதுக்கீடு செய்தார். குமாரமங்கலம் பிர்லாவை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியபிறகு, இந்த நடவடிக்கையில் பரேக் ஈடுபட்டார் என சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்