முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபாச இணைய தளங்களை முடக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.31 - ஆபாச இணையதளங்களை முடக்குவது தொடர்பான பிரச்னைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவி்த்தது.

இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி லோதா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அ்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர் ராவ் ஆஜராகி வாதாடுகையில், ஒரு ஆபாச இணையதளத்தை அரசு முடக்கினால், அதுபோல மற்றொரு இணையதளம் ஏற்படுத்தப்படுகிறது. மேலும், நாட்டிலேயே ரகசியமாக செயல்படும் ஏராளமான கம்ப்யூட்டர் சர்வர்கள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதும் கடினமாக உள்ளது. இந்தியாவில் செயல்படும் அனைத்து சமூக இணையதளங்களும், வெளிநாட்டில் இருன்துதான் இயக்கப்படுகின்றன. ஆபாச இணையதள விவகாரத்தில், வெளிநாட்டில் இருந்து பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் சர்வர்களை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது என்றார்.

சட்டத்தை விட தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. எனவே, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சட்டமும் தேவைப்படுகிறது. இணையதளங்களில் ஆபாச இடம்பெறுவதை ட்டுப்படுத்தும் விவகார்ததில், சட்டமும், தொழில்நுட்பமும், அரசு நிர்வாகமும் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழி கண்டறியப்பட வேண்டும். ஆபாச இணையதளங்களைக் கட்டுப்படுத்தத் தேவையான விதிகளையும், வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் கமலேஷ் வாஸ் வானி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தார். அதில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு ஆபாச இணையதளங்கள் முக்கிய காரணமாக உள்ளது. ஆகையால், ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago