முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செரீனாவுக்கு 80-வது வெற்றி

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், ஆக.31 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் அந்தப் போட்டியில் 80-வது வெற்றியைப் பதிவு செய்தார் உலகின் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ். நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா தனது 2-வது சுற்றில் 6-1, 6-0 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான வானியா கிங்கை தோற்கடித்தார்.

அதேநேரத்தில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்த செர்பியாவின் அனா இவானோவிச், 2011 சாம்பியனான சமந்தா ஸ்டோசர் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர். மற்ற 2-வது சுற்று ஆட்டங்களில் செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா, பெலாரஸின் விக்டோரிய அசரென்கா ஆகியோர் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். ஆடவர் பிரிவைப் பொறுத்தவரையில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் பால் ஹென்றி மத்தேயூவை தோற்கடித்தார். இதன்மூலம் தொடர்ந்து 25-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 3-வது சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் ஜோகோவிச்.

மற்ற ஆட்டங்களில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் மத்தியாஸ் பாகின்கரையும், கனடாவின் மிலோஸ் ரயோனிச் 7-6 (4), 5-7, 6-4, 7-6 (3) என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் தகுதிநிலை வீரரான பீட்டர் கோஜோவ்ஸிக்கையும் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்