முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னேற்றப் பாதையில் இந்தியா: அருண் ஜெட்லி

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.01 - பணவீக்கம் குறைந்து முன்னேற்றப்பாதையில் இந்திய பொருளாதாரம் செல்ல தொடங்கியுள்ளதாக மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.. மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு பதவியேற்று நூறு நாட்கள் ஆகியுள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியாகும். பணவீக்கமும் கட்டுக்குள் உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இது வளர்ச்சிக்கான அறிகுறியாகும்.

30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கட்சியின் ஆட்சி நாட்டில் அமைந்துள்ளதால் கொள்கை முடிவுகளை விரைந்து எடுக்க முடிகிறது.

விலைவாசியை குறைத்து, வளர்ச்சியை ஊக்குவிப்பதே அரசின் முதல் பணி. அரசு நடவடிக்கைகளின் பலன் சிறிது சிறிதாக தெரியவரும். அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.

பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்ல தொடங்கியுள்ளது என்பதற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரித்து வருவது நல்ல அறிகுறியாகும். எந்த சவாலையும் முறியடிக்கும் வகையில் ராணுவம் முழு பலத்துடன் உள்ளது. இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.

நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக பதவியேற்று செப்டம்பர் 5ம் தேதியன்று 100 நாட்கள் முடிந்து 101 நாட்கள் ஆகிறது. இதை முன்னிட்டு அன்று தனது அரசின் 100 நாள் சாதனை குறித்து பத்திரிகையாளர்களிடம் அவர் கலந்துரையாட உள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்