முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்துடன் நெப்போலியன் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.1 - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பிறகு தனது பிறந்த நாளையொட்டி கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நேற்று காலை விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவரை நடிகர் நெப்போலியன் சந்தித்து பேசினார்.

நெப்போலியன் கடந்த 6 மாதமாக குடும்பத்தினருடன் அமெரிக்காவில் வசித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் சென்னை திரும்பினார். விஜயகாந்த் உடல் நிலை பற்றி கேள்விப்பட்ட அவர் நேற்று காலை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகம் சென்று விஜயகாந்தை சந்தித்து பேசினார்.

அப்போது விஜயகாந்திடம் நெப்போலியன் உடல் நலம் விசாரித்தார். இருவரும் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அரசியல் சூழ்நிலைகள் குறித்து அவர்கள் பேசியதாகவும் தெரிகிறது.

நெப்போலியன் ரசிகர் மன்ற தலைவர் கவுரிசங்கரும் உடன் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்