முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.1 - ஆசிரியர்கள் தினம் என்ற தமிழ் சொல்லை குரு உத்சவ் என மாற்றியதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை முன்னாள் செயலாளர் மா.செல்வராஜின் மகள் அனுஷா–அர்மேஷ் திருமணம் நேற்று காலை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்.

ஆசிரியர் தினம் என்பதை நாம் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம். அந்தச் சொல்லை மாற்றி இன்றைக்கு வந்துள்ள மத்திய புதிய அரசு வெளியிட்டு ஆணை, இனிமேல் அனைத்துப் பள்ளிகளிலும் "குரு உத்சவ்" என்று தான் ஆசிரியர் தினத்தை அழைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி நம்முடைய மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்தி விட்டு, அதற்குப் பிறகு இந்த மொழிக்குரியவர்களை, இந்த மொழியால் உயர்ந்தவர்களை, இந்த மொழியால் தங்களை வருத்திக் கொண்டவர்களை வீழ்த்தி விட கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை.ஆரிய ஆதிக்கம் இன்னும் தொடர்ந்தால் தமிழன் மேலும் அடிமைப்பட்டு விடுவான். எனவே, தமிழ் சமுதாயத்துக்காக அனைவரும் பாடுபட வேண்டும்'' என்றார். என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்